நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நாளை முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் தொடங்க உள்ளது.முன்பதிவு செய்ய பக்தர்களுக்கு அழைப்பு...
நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நாளை முதல் வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது பிரசித்தி பெற்ற ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு தினமும் காலை வடை மாலை அலங்காரம்,அபிஷேகம் நடந்து வருகிறது.பின் மலர்கள் வெள்ளிக்கவசம்,முத்தங்கி அலங்காரம் அல்லது தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
தொடர்ந்து ஆண்டு தோறும் கார்த்திகை மார்கழி தை மாதங்களில் மட்டும் இரவில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்படும் இதற்காக கட்டளைதாரர்களிடமிருந்து ரூ.95,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சேலத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து, 110 கிலோ வெண்ணை கொள்முதல் செய்யப்படும். குளிர்ச்சியான சீதோசன நிலை இருந்தால் மட்டுமே இந்த அலங்காரத்தை செய்ய முடியும் அதனால் பனிக்காலங்களில் மட்டுமே இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் இளையராஜா கூறிய போது நடப்பாண்டு நாளை முதல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணை காப்பா அலங்காரம் தொடங்க உள்ளதால் அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் கடந்த வருடம் 2024 நவம்பர் 23 இல் தொடங்கி 2025 ஜனவரி 31 வரை 45 நாட்கள் வெண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டது,என தெரிவித்தார்.

-TU5ws7n3kV.jpeg )
-SXgDfGgJfO.jpg)