தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 3.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுகாதார வளாகங்களையும், ஓமலூர் வட்டம், பனங்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூபாய் 1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைக் கட்டடங்களையும், பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைக் கட்டடங்களையும், சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், மணியனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.85.44 இலட்சம் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 4 புதிய வகுப்பறைக் கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் பாகல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறைக் கட்டடங்களைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். மேலும் 16 மாணவர்கள், 35 மாணவிகள் என மொத்தம் 51 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



