சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவிப்பு:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 24 ஆவது பட்டமளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் நடக்க உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலைக்கழக 24-வது பட்டமளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதால் நவம்பர் 2024 ஏப்ரல் 2025 பருவங்களில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற தகுதியான இளநிலை,முதுநிலை,அறிவியல் நிறைஞர்,பட்டயம்,சான்றிதழ் படிப்பு மாணவர்கள்,பெரியார் பல்கலை இணைய வழி,தொலைநிலைக் கல்வி மைய மாணவர்கள்,அவர்களுக்குரிய பட்ட சான்றிதழ் விண்ணப்பங்களை www periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்க வேண்டும்.
மேலும் உரிய கட்டணம் மற்றும் இணைப்புக்கோளுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் மற்றும் தொடர்புடைய நிறுவனத் தலைவர்கள் தேர்வு ஆணையர் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் என்ற அலுவலக முகவரிக்கு வரும் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது பட்ட சான்றிதழுக்கு ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவர்கள் தனியே விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
அதன்படி முனைவர் பட்டம் பெற தகுதி பெற்ற மாணவர்கள்,பல்கலைக்கழக இணையதளத்தில் முனைவர் பட்டத்திற்கு என தனியா கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கி,உரிய இணைப்புகளுடன் அனுப்ப வேண்டும். ஏப்ரல் 2025 பருவத்திற்கான பல்கலைக்கழக தேர்வில்,முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்,மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை படித்த கல்லூரி மூலம் முதல்வர் அல்லது நிறுவன தலைவரின் மேல் ஓப்பம் பெற்று தேர்வாணையர்,பெரியார் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

-C6uc21pSI2.jpg )
