சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கடந்த 4 ம் தேதி கல்குவாரியில் இரண்டு மூதாட்டிகள் சடலம் இருப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் பேரில் போலீசார் விரைந்து சென்று சடலங்கலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட பொழுது இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான பாவாயி- மற்றும் பெரியம்மாள் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து சடலங்கலை பிரதே பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட பொழுது மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த தங்க நகைகள் காணவில்லை என்று தெரியவந்தது.
மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இந்த விசாரணையின் அடிப்படையில் சங்ககிரி அருகே உள்ள ஒறுக்கா மலை என்னும் பகுதியில் குற்றவாளி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமை காவலர்கள் அழகு முத்து கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி சுற்றி வளைத்தனர் அப்பொழுது குற்றவாளி அய்யனார் போலீசார் கத்தியால் தாக்க முயற்சி செய்த பொழுது உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவரின் வலது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிக்க பயிற்சி செய்த பொழுது போலீசார் சுட்டதில் குற்றவாளி அய்யனாரின் வலது காலில் துப்பாக்கி கொண்டு பாய்ந்தது பின்னர் போலீசார் அவரை பிடித்து உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர் பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து,வருகின்றனர்.தொடர்ந்து குற்றவாளி அய்யனார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் சங்ககிரி துணை கண்காணிப்பாளர் குற்றவாளியின் தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் மற்றும் இன்ஸ்பெக்டர் இடம் விசாரணை மேற்கொள்ளனர்.

-(8)-Jv4JGOysnw.jpg )

-SXgDfGgJfO.jpg)