சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை,
தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கொடியையும் பறித்து சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்,
ஆத்தூர் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்துள்ளனர், அப்போது உடல் முழுவதும் வலுவலுப்பான ஆயிலை பூசிக்கொண்டு நள்ளிரவில் உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவர் நாராயணனின் மனைவி செல்வப்பிரியாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை பறித்துள்ளார், சுதாரித்துக் கொண்ட செல்வப்பிரியா தாலிக்கொடியை இருக்கி பிடித்துக் கொண்டதால் பாதி தாலிக்கொடியை மட்டும் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார், இதையறிந்த கணவர் நாராயணன் திருடனை பிடிப்பதற்காக துரத்தியுள்ளார், ஆனால் பிடிக்க முடியவில்லை, திருடன் தாலிக்கொடி பறித்ததில் செல்வப்பிரியாவில் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது,
மேலும் அதே தெருவில் பூட்டியிருந்த பச்சையம்மாள் என்பவரின் வீடு மற்றும் வெங்கடேஷ், முத்தம்மாள் ஆகிய மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து உள்ள புகுந்த ஆசாமி பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டு பவுன் தங்க நகை, பத்தாயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது, இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தலைவாசல் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர், இதனிடையே வலுவலுப்பான ஆயிலை உடலில் தடவிக் கொண்டு அடுத்தடுத்த நான்கு வீடுகளில் மர்ம ஆசாமி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலிக்கொடையை பறித்து சென்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


