மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி சரிந்து விழுந்து ஒப்பந்த தொழிலாளி காவிரி கிராஸ் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் எடப்ப்பாடி பகுதியை சேர்ந்த பழனிசாமி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இறந்து போன வெங்கடேஷுக்கு திருமணம் ஆகி சரிதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இதேபோல் பழனிசாமி என்பவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இறந்து போன தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடு கேட்டு இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளியின் உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களிடம் அனல்மின் நிலை அதிகாரிகள் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


-SXgDfGgJfO.jpg)