ட்ரெண்டிங்

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய இது சரியான நேரம்! 

சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேலம் கிழக்கு கோட்டம் அஞ்சல் துறையின் கீழ் 42 ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம் தலைமை அஞ்சலகம் மற்றும் அஸ்தம்பட்டி துணை அஞ்சலகத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது.

மேலும் ஆத்தூர், ஏற்காடு, அயோத்தியப்பட்டணம், அம்மாபேட்டை, வாழப்பாடி, சேலம் தெற்கு, தலைவாசல், பேர்லாண்ட்ஸ் அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, பேளூர், காமராஜர் நகர் காலனி, காரிப்பட்டி, கெங்கவள்ளி, சுக்கம்பட்டி, ஆட்டையாம்பட்டி, கொண்டலாம்பட்டி, மல்லூர், ஒண்டிக்கடை, வீரபாண்டி, மல்லியக்கரை, நரசிங்கபுரம், வடசென்னிமலை, பெத்தநாயக்கன்பாளையம் வீரகனூர் மற்றும் ஏத்தாப்பூர் உள்ளிட்ட அனைத்து துணை அஞ்சலகங்களிலும் அலுவலக நேரங்களில். ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதார் புதிய சேவை பெறுவதற்கும், 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் சேவை பெறுவதற்கும், கட்டணம் ஏதும் இல்லை. பெயர் திருத்தம், முகவரி திருத்தம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற மற்ற சேவைகளுக்கு ரூபாய் 50 முதல்ரூபாய் 100 ஆதார் கட்டணமாக வசூலிக்கப்படும்.

எனவே, பொது மக்கள் தங்களுடடைய ஆதார் திருத்தங்களை மேற்கொள்ள தங்களுடைய அசல் ஆவணங்களை கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தபால் நிலையத்தை அணுகி பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.