சேலம் அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவில் வசந்த மண்டபம் கும்பாபிஷேக விழா..
சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் இருக்கும், அருள்மிகு ராஜகணபதி திருக்கோவிலில், வாகனங்கள் பூஜை செய்வதற்கும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்வதற்கும், கோவில் முன்புறம் வசந்த மண்டபம் மற்றும் வாகனம் பூஜை செய்யும் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலைத்துறையுடன் சோனா கல்வி குழுமமும் இணைந்து கட்டப்பட்ட இந்த மண்டபத்தின் கும்பாபிஷேக விழா, இன்று காலையில் நடைபெற்றது. வேத விற்பனர்கள் பிரத்யேக யாகசாலை அமைத்து, புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு யாகபூஜைகள் நடத்தினர்,தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க ,புனித நீர் கலசம் கோவிலுக்கு சுற்றி ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, மண்டபத்தின் மேல் ஊற்றி கும்பாபிஷேக வைபவம் நடத்தப்பட்டது. அதனை அடுத்து, மாநகர மேயர் ராமச்சந்திரன், சோனா கல்லூரி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, துணை தலைவர்கள் தியாகுவள்ளியப்பா, சொக்கு வள்ளியப்பா முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ரிப்பன் கத்திரித்து மண்டபத்தை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த வைபவத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசித்தனர்.

-br9zlcJ7DR.jpg )
