ஆன்மிகம்

லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் ஆய்வுக்கு பின் கூட்டறிக்கை! 

 

சேலம் 2-வது அக்ரஹாரத்தில் உள்ள அருள்மிகு இலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் தீத்தடுப்பு, பேரிடர் மேலாண்மை, முன்னெச்சரிக்கை, சாலை பாதுகாப்பு, அனுமதியற்ற மற்றும் அனுமதியை மீறிய கட்டுமானம் வருவாய்த்துறை மூலம் பொது அனுமதி பெறாத கட்டுமானங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட பல்வேறு இனங்கள் குறித்து இன்று (மே 07)  அரசுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, காவல்துறை, திருத்தொண்டர்கள் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், திருக்கோயிலின் மாதாந்திர பௌர்ணமியின் போது வெளிப்புற வலம், இதர புறப்பாடுகள் குறித்தான நாட்கள் மற்றும் நேர விவரத்துடன் திருக்கோயில் தரப்பில் விவர பட்டியல் வழங்கப்பட்டவுடன் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம் போக்குவரத்து, மகளிர் காவல் பிரிவுகளை ஒருங்கிணைத்து உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதில் அதற்கான விலா அறிக்கையினை இன்று பிற்பகலே சமர்ப்பித்து விடுவதாக திருக்கோயில் தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. 

மேற்காணும் விழா நாட்களின் போது சுத்திகரிப்பு பணிகள் மேற்க்கொள்ளப்படும் எனவும், நோய்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்படும் எனவும், சேலம் மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இச்சுற்றுவட்டார பகுதி முழுவதும் நில அளவை பணி செய்து அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து குறியீடு செய்தவுடன் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கூட்டாக உறுதியளிக்கப்பட்டது. 

அவசர அவசியம் கருதி சுற்றுப்புறங்களில் பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்கப்படும் எனவும் ஏற்கனவே நடைபாதை அமைக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் வதும் ஏற்படாதவாறு கண்காணிக்கப்படுமெனவும் சேலம் மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அனுமதியற்ற கட்டுமானங்கள் அனுமதியை மீறிய கட்டுமானங்கள், அபாயகரமான கட்டுமானங்கள் என அனைத்தும் என அனைத்தும் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து விதிகளின் படி நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் சேலம் மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

தற்காலிக ஏற்பாடாக இச்சுற்று வட்டார பகுதிகளில் குறியீடு செய்தவுடன் பாதசாரிகளுக்கான பகுதி, வாகனங்கள் சென்று வரும் பகுதி ஆகியவைகளை தனித்தனியாக பெயிண்டால் அடையாளப்படுத்தி கொடுத்தால் விதிமீறுபவர்களை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இத்திருக்கோயிலின் சுற்று வட்டாரப்பகுதி முழுவதும் இன்றியமையாத நிலையில் NO PARKING அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும் எனவும், அதனை மீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது விதிகளின் படி நடவடிக்கைகள் தொடரப்படுமென போக்குவரத்து காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இத்திருக்கோயிலானது சுற்றுப்புறம் முழுவதும் சாலைகளால் சூழப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து வாகனங்கள் இயக்கப்படுவதாலும் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்க்கொள்வது குறித்து தனிப் பாதுகாப்பு வரைவினை சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரும் சேர்ந்து உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வேகமாக வாகனங்கள் இயக்குதல், அலட்சியமாக வாகனம் இயக்குதல், கன ரக வாகனங்கள் இயக்குதலில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்டவைகளினால் திருக்கோயிலோ, பக்தர்களோ, பொதுமக்களோ என எந்தவித அபாயத்திற்கும் ஆளாகதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை தரப்பில் தனியே எடுத்துரைக்கப்பட்டது.

பேருந்து நிறுத்துமிடங்கள் தனியாக பெயிண்டால் குறியீடு செய்து காட்டப்பட்டு அவ்விடத்தில் மட்டுமே பேருந்துகள் நின்று செல்லும் வகையில் கண்காணிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

வேக கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் போக்குவரத்து தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. பொதுவாகவே ஆக்கிரமிப்புத்தாரர்களுக்கு ஏதுவாக, சற்று தள்ளி தான் சாக்கடை கால்வாய்கள் கட்டப்படுவதால் பொது சொத்துக்களான சாலை பகுதியையும் கூடுதலாக பயன்படுத்துவதோடு சாக்கடையையும் அபகரித்து கட்டுமானங்கள் கட்டி பயன்படுத்துவதாக மனுதாரரால் புகார் கூறப்பட்டதில் தற்போது நில அளவை செய்யபட்டதில் கண்டறியப்படும் மாநகராட்சி பகுதி முனை வரையில் சாக்கடைகள் மாற்றியமைக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இத்திருக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் பாதணிகளை பாதுகாக்க தனியே ஆள் நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் எந்தவித அவசர தகவல் என்றாலும் தொடர்பு கொள்ள ஏதுவாக காவல்துறை, ஆம்புலன்ஸ் தீயணைப்பு, இந்து அறநிலையத்துறை உயர் அலுவலர்களின் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிகளை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையினை திருக்கோயிலில் வைக்க வேண்டும் என குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதில் அடுத்த இரண்டு தினங்களில் வைக்கப்பட்டு விடுமென திருக்கோயில் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.