சேலம் மாவட்டத்தில் த.வெ.க.வின் முதல் அலுவலகத்தைத் திறந்து வைத்ததுடன், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு மாவட்டத் தலைவர் தமிழன் ஆ.பார்த்திபன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து, த.வெ.க.வின் நிர்வாகிகள், கட்சியின் கொடியை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, த.வெ.க.வின் சேலம் அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம் சார்பில் குப்பனூரில் அமைக்கப்பட்டிருந்த கட்சியின் அலுவலகத்தை த.வெ.க.வின் சேலம் மாவட்டத் தலைவர் தமிழன் ஆ.பார்த்திபன், மேள தாளங்கள் முழங்க கட்சியினரின் உற்சாகத்துடன் அலுவலகத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த 50 அடி உயர கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில், த.வெ.க.வினர் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் த.வெ.க.வினர் திறந்துள்ள முதல் அலுவலகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

-miUCYPG2ce.jpg )
