ட்ரெண்டிங்

ஓமலூர், காடையாம்பட்டி ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு! 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இன்று (மே 06) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்விற்குப்பின் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் தரமாகவும் உரிய கால அளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிகள் மூலம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊராட்சி பொது வளர்ச்சி நிதி, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தூய்மை பாரத இயக்கம், 15- வது ஒன்றிய நிதிக் குழு, பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ரூபாய் 191.72 கோடி மதிப்பீட்டிலான 5,820 திட்டப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 4,736 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 888 பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூபாய் 127.34 கோடி மதிப்பீட்டிலான 3,660 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 3,333 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 327 பணிகள் நடைபெற்றுவருகின்றன 

ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திண்டமங்கலம் மற்றும் பெரியேரிப்பட்டி ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் 4 விடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மதிப்பீட்டில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், பெரியேரிப்பட்டி ஊராட்சியில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 240 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருவதையும், தொளசம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 5.63 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உ.மாரமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 457 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ஊராட்சியில் ரூபாய் 15.27 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தீர்தேக்கத் தொட்டியிணையும், கொளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ரூபாய் 62.86 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறை கட்டிடங்களும், மேலும் ரூபாய் 16.88 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகக் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், பச்சனம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 13.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாவிலைக்கடை கட்டடப் பணிகளும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

அதேபோன்று காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 6.25 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டு வருவதையும், செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடையினையும், பள்ளிக்காடு அருந்ததியர் காலனியில் ரூபாய் 43.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினையும், கொங்குபட்டி ஊராட்சி துட்டம்பட்டியில் ரூபாய் 9.97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையையும், டேனீஷ்பேட்டை ஊராட்சியில் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.05 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அனைத்தையும் தரமாகவும். உரிய கால அளவிலும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.