ட்ரெண்டிங்

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் பங்கேற்க அழைப்பு!

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் பங்கேற்க அழைப்பு! 

ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு ரீல்ஸ், குறும்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் ரத்தசோகை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ரீல்ஸ் மற்றும் குறும்பட போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரத்தசோகை குறித்த பொய்யான தகவல்களை அகற்றுதல், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவு வகை செய்முறைகள், ரத்தச்சோகையின் அறிகுறிகளை படைப்பாற்றலாக வெளிப்படுத்துதல், இரும்புச்சத்து பற்றிய முக்கியத்துவத்தை கதை வடிவில் சொல்வது, ரத்தசோகை உள்ள மாணவர்களின் ஆற்றல் கவனத்திறன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை காட்டுதல், தாய்மார்களுக்கு இரும்புச்சத்து மற்றும் போலி அமிலத்தின் தேவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஒரு குறும்படம் மற்றும் ரீல்ஸ் உருவாக்கலாம். 

கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஒரு குறும்படம் ஒரு நிமிடத்திலும், ரீல்ஸ் 30 வினாடிகளில் இருக்குமாறும் தயாரிக்க வேண்டும். ரத்தசோகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வமுள்ள தனிநபர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபரின் பெயர், நிறுவனத்தின் பெயர், தொடர்பு எண், கோப்பின் பெயரை பங்கேற்பவர் பெயருடன் தலைப்பை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். 

சிறந்த ரீல்ஸ்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 25,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 15,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000, சிறந்த சமூக விழிப்புணர்வு வீடியோக்களை முதல் பரிசாக ரூபாய் 50,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 25,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 15,000 வழங்கப்படும். 

ரீல்ஸ் மற்றும் குறும்படத்தை வரும் மே 27- ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.