ஆன்மிகம்

நீட் தேர்வர்களுக்கு சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்! 

தேசிய தகுதி மற்றும் நடைபெறவுள்ளதையொட்டி நுழைவுத்தேர்வு நாளை (மே 04) சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் இன்று (மே 03) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) நாளை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 9,731 தேர்வர்கள் எழுத உள்ளனர். இதற்கென சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 22 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. மாணவ, மாணவிகள் நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும். 

மேலும் தேர்வுக் கூடங்களைக் கண்காணித்திடவும் தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் மாவட்ட அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமணம் செய்யப்பட்டு தேர்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் செல்வதற்கு எதுவாக நாளை காலை முதல் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடுவதை உறுதி செய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவும், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையினர் மூலம் தேவைப்படும் இடங்களில் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை உறுதி செய்திட பொறுப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் விதிமுறைகளுக்குட்பட்டு சேலம் மாவட்டத்தில் மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி முன்னேற்பாட்டுப்பணிகள் அனைத்தும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், தேர்வுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மயில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர், வருவாய்துறை, காவல்துறை, மாவட்ட கருவூலத்துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்