ட்ரெண்டிங்

தொழிலாளர் தினம்- டாஸ்மாக் கடைகள் செயல்படாது என அறிவிப்பு!

 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் வருகின்ற மே 01- ஆம் தேதி அன்று மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, வரும் மே 01- ஆம் தேதி தொழிலாளர் தினத்தன்று மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1 எப்.எல்., எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் அன்றையதினம் மூடப்பட வேண்டும். 

இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.