விளையாட்டு

சேலத்தில் டி.என்.பி.எல்.- கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி! 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் வரும் ஜூன் 6- ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன; இறுதிப்போட்டி ஜூலை 6- ஆம் தேதி திண்டுக்கலில் நடைபெறுகிறது; கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. 

நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 6- ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 9 போட்டிகள் சேலத்தில் நடைபெறுகின்றன. வரும் ஜூன் 13- ஆம் தேதி முதல் ஜூன் 19- ஆம் தேதி வரை சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் மைதானத்தில் டி.என்.பி.எல் போட்டிகள் நடக்கிறது.

சேலத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.