ட்ரெண்டிங்

கோட்டை அரசுப் பள்ளிகள் மாணவிகள் தர்ணா போராட்டம்.....தலைமையாசிரியை மிரட்டுவதாக மாணவிகள் குற்ற

சேலம் மாநகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழமையானதாகவும், புகழபெற்றதாகவும் விளங்குகிறது கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வள்ளுவர் சிலைக்கு அருகே அமைந்துள்ளது. அம்மாப்பேட்டை, வாழப்பாடி, அயோத்தியாபட்டினம், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, கொண்டலாம்பட்டி, ஐந்து ரோடு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை, அஸ்தம்பட்டி என சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500- க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.

 

மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில்,மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதார பணியாளர்கள் இல்லாததும், இதனால் பள்ளியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆவதால், கழிவறைகளைப் பயன்படுத்த முடியாத சூழலில் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள், தலைமையாசிரியையிடம் கூறினால், மாற்று சான்றிதழ் வழங்கி வீட்டுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டுவதாகக் குற்றச்சாட்டியுள்ள மாணவிகள், இன்று (அக்.06) காலை 10.00 மணிக்கு வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

குறிப்பாக, "பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கை எவ்வளவோ அதற்கேற்ப சுகாதார ஊழியர்கள் பணியில் இல்லை! பணியில் உள்ள ஊழியர்களால் பள்ளியை முழுமையாகப் பராமரிக்க முடிவதில்லை, தலைமை ஆசிரியை தன் கணவரை வைத்து எங்கள் சக மாணவியை மிரட்டி வீடியோ எடுத்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ள பதாகைகளை ஏந்தி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகமும், சேலம் மாநகராட்சி அலுவலகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.