சினிமா

அஜித்தின் 63ஆவது படம்-  Good Bad Ugly! 


நடிகர் அஜித்குமாரின் 63ஆவது திரைப்படத்திற்கு 'Good Bad Ugly' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. ஜூனில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் 2025 பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. 

நடிகர் அஜித்குமார் தற்போது 'விடா முயற்சி' படத்தில் நடித்து வரும் நிலையில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்குமாரின் படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தும் தெலுங்கு தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்துள்ளார். 

கடந்த 2002- ஆம் ஆண்டு அஜித்குமாரின் நடிப்பில் ஆங்கிலத் தலைப்பில் 'வில்லன்' திரைப்படம் வெளியாகியிருந்தது.