கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்கின்றனர். இதன் காரணமாக, மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் ஆள்நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
குறிப்பாக, சேலம் மாநகர பகுதிகளான கடைவீதி, முதல் அக்ரஹாரம், பட்டைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆள்நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சாலையோரக் கடைகளில் வியாபாரம் மந்தமாக இருப்பதால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.
இருப்பினும், சாலையோரங்களில் உள்ள கம்மங்கூழ், இளநீர், பழச்சாறு, நுங்கு, தர்பூசணி, பழச்சாறு விற்பனை கடைகளில் வியாபாரம் சூடுப்பிடித்துள்ளது. மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளில் உள்ளோர் வாகனங்களில் பயணிக்கும் போது அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


