சேலம்:தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் சராசரியாக தினமும் 102 பாரன் ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் தலைவலி, சோர்வு, கால் பிடிப்பு, மூச்சுத் திணறல், நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், பதற்றம் மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, வெயில் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)