ட்ரெண்டிங்

பா.ம.க. எம்.எல்.ஏ.வைத் தடுத்த தி.மு.க.வினர்....சேலத்தில் பரபரப்பு! 

சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூபாய் 4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கானப் பணிகள் இன்று (மார்ச் 13) பூமி பூஜையுடன் தொடங்கவிருந்த நிலையில், அங்கு சென்ற பா.ம.க.வின் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளை தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தியதுடன் தள்ளிவிட்டதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. 

அப்போது, எம்.எல்.ஏ. அருள் நான் இந்த தொகுதி எம்.எல்.ஏ., எனது முயற்சியால் இங்கு பள்ளிக் கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தி.மு.க.வினரிடம் கூறினார். இருப்பினும், எம்.எல்.ஏ.வுடன் வந்திருந்த பா.ம.க.வினர் மற்றும் தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

திடீரென தரையில் அமர்ந்த அருள் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்துவிட்டுதான் போவேன் என்று கூறியதால் பரபரப்பு மேலும் கூடியது. காவல்துறையினர், அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து திட்டமிட்டப்படி பூமி பூஜைகள் நடைபெற்றது. எம்.எல்.ஏ. அருளை காரில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 