ட்ரெண்டிங்

ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவை குறித்த முக்கிய அறிவிப்பு!

 

ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் சேவை தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜோலார்பேட்டை ரயில்வே யார்டில், தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இன்று (அக்.21) ஒருநாள் மட்டும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (ரயில் எண் 06412) ஈரோடு முதல் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

 

அதேபோல், மறுமார்க்கத்தில் ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (ரயில் எண் 06411) திருப்பத்தூர் முதல் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கும், ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூருக்கும் ரயில் இயக்கப்படாது. இந்த ரயில் சேலம் வழியாக இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.