சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நகைச்சுவை நடிகருமான பெஞ்சமின் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில் தான் உயிரோடு இருக்கிறேன்; வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என குறிப்பிட்டு அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் நடிகர் பெஞ்சமின் கூறியதாவது, சமூக வலைதளங்களில்,தான் இறந்துவிட்டதாக நான்காவது முறையாக வீடியோ வெளியிட்டுள்ளனர். சேலத்தில் உள்ள எனது வீட்டிற்கு சென்று மக்கள் விசாரித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் வீவர்ஸ் வேண்டும் என்பதற்காக இறந்துவிட்டதாக வேண்டுமென்று வீடியோ வெளியிடுகிறார்கள் கை, கால்கள் நன்றாக இருக்கும் நிலையில் உழைத்து சாப்பிடுங்கள் இதுபோன்று சமூக வலைதளங்களில் போட வேண்டாம்; மிகவும் கஷ்டமாக உள்ளது. இவ்வாறு போடுவதால் எங்களது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படலாம்.
தற்போது பரமத்திவேலூரில் உள்ள கோரைக்காரன் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன். நன்றாக உள்ளேன்; தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



-hcTFAGMRGb.jpg)