தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5- வது நாளான இன்று (ஜன.10) பங்கேற்று பேசிய பா.ம.க.வின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம், மேச்சேரியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இக்கோயிலில் இந்தாண்டு குடமுழுக்கு நடைபெறுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திராவிட மாடல் ஆட்சியில் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு மூன்று முறை சென்று ஆய்வு செய்திருக்கிறோம். அதில் சுமார் 12 ஆண்டு காலமாக திறக்கப்படாமல் இருந்த கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலைப் பக்தர்களுக்காகத் திறந்திருக்கிறோம். இக்கோயிலில் நடைபெறும் திருப்பணிகள் அனைத்தும் நிறைவுச் செய்து இந்தாண்டில் குடமுழுக்கு நடத்தப்படும் என்றார்.


