சேலம் கோட்டை அருள்மிகு அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி 10- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 05.00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாள்தோறும் மாலை 05.00 மணிக்கு மேல் அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல், திருமொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராதனம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம், திருக்கொட்டாரத்தில் பக்தி உலாவுதல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
வரும் ஜன.21- ஆம் தேதி வரை சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறவுள்ளது. இத்திருக்கோயிலில் அருள்மிகு அழகிரிநாத சுவாமி சன்னதி, தாயார் சன்னதி, ஆதிவேணுகோபால் சுவாமி சன்னதி, ராமர் சன்னதி, ஆண்டாள் சன்னதி, சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலகிருஷ்ணர், விஷ்ணு துர்க்கை மற்றும் ஆழ்வார். ஆச்சார்யாதிகள் சன்னதிகள் மிக சிறப்பான முறையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


-SXgDfGgJfO.jpg)