சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி, கைக்காட்டி வெள்ளார், வசந்தம் நகரில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ராமபகத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வரும் டிச.30- ஆம் தேதி அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதையொட்டி, வரும் டிச.29- ஆம் தேதி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையும், பால்குட ஊர்வலமும், 108 கலச பூஜையும் நடக்கிறது. அன்று மாலை வலசுபாளையம் சக்தி கலைக்குழுவினரின் பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் டிச.30- ஆம் தேதி அன்று காலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களும், 10,008 வடைமாலை சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், மஹா தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, மதியம் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், மாலையில் ஆஞ்சநேயர் உற்சவர் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளது. அனுமதி ஜெயந்தி அன்று காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படவுள்ளது.


