ட்ரெண்டிங்

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு! 

சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும், பயணிகளின் வசதிக்காகவும் சென்னை சென்ட்ரல்- கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவிருக்கிறது. வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி முதல் செப்டம்பர் 25- ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கும், ஆகஸ்ட் 29- ஆம் தேதி முதல் செப்டம்பர் 26- ஆம் தேதி வரை கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். 

இந்த சிறப்பு ரயில்கள், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.