பெஸ்ட் கல்வி அறக்கட்டளை மற்றும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் +2 மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் கல்வி கண்காட்சி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஜனவரி 05- ஆம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு Airpods, 3 பேருக்கு கையடக்க கணினி, ஒருவருக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றுகின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜெகன், திரைப்பட நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
எந்த துறையைத் தேர்ந்தெடுத்தால் வேலை கிடைக்கும்?, வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி?, கல்லூரியில் சேருவதற்கு எப்படி விண்ணப்பிப்பது? போன்ற மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு தலைச் சிறந்த கல்வியாளர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர். கல்வி கண்காட்சியில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். கூடுதல் விவரங்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்பதிவிற்கு 86085-58000, 86085-59000 ஆகிய எண்களை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



