ஆன்மிகம்

தி.மு.க. சார்பில் நிதியுதவி வழங்கிய அமைச்சர்!

சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நேற்று (டிச.19) மாலை நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து ஏற்பட்ட விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 2 தொழிலாளர்கள் நிலக்கரி குவியலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீகாந்த், சீனிவாசன்,முருகன் மற்றும் கௌதம் ஆகிய 4 பேரிடமும் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு அளித்துவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுபடி அவர்களின் குடும்பத்தாருக்கு தி.மு.க. சார்பில் தலா ரூபாய் 50,000 வழங்கினார். 

தொடர்ந்து உயிரிழந்த வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி ஆகியோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி வழங்கினார். முதலமைச்சர் உத்தரவின்படி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த மேட்டூர் அனல்மின் நிலைய பகுதிக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், விபத்து நடந்தது குறித்து அனல் மின்நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.