2025- ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 2025- ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்களாகும். 2025- ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், தமிழ் புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத், ரம்ஜான், தைப்பூசம் உள்ளிட்டவை பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 01- ஆம் தேதி முதல் டிசம்பர் 25- ஆம் தேதி வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் விடுமுறை நாட்கள் பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.


-SXgDfGgJfO.jpg)