சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் பால்வளத்துறை செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற பால் வளத்துறை ஒருங்கிணைந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் சங்க செயலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அலுவலர்கள், பால் உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர்களுடன் கலந்துரையாடினர்.
பால் உற்பத்தி, விநியோகம், சந்தை நிலை மற்றும் சுயதிறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முக்கிய ஆலோசனைகளை நடத்தினர். பண்ணையார்கள் எதிர்கொள்கிற சவால்கள் மற்றும் தீர்வுகள் பற்றியும், பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வழிகள், வளர்ச்சி உதவித் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, பால் வளத்துறை அதிகாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)