ட்ரெண்டிங்

சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

 

சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் வரும் அக்.27- ஆம் தேதி முதல் குளிர்கால அட்டவணைப்படி விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானங்களின் வருகை, புறப்பாடு நேரம் குறித்த விமான பயண அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 

 

சேலத்தில் இருந்து செல்லும் பயணிகள் (அல்லது) கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத்தில் இருந்து சேலம் வரும் பயணிகள் விமான சேவைகளின் நேரத்தை நன்கு அறிந்து அதற்கேற்றவாறு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

 

புதிய அட்டவணைப்படி, சென்னை மற்றும் சேலம் இடையே இண்டிகோ நிறுவனம் தினசரி விமான சேவை வழங்கி வரும் நிலையில், குளிர்கால அட்டவணைப்படி, சென்னையில் இருந்து மதியம் 02.15 மணிக்கு புறப்படும் பிற்பகல் 03.25 மணிக்கு சேலத்தை வந்தடையும். மீண்டும் பிற்பகல் 03.45 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் விமானம், மாலை 04.45 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.