தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதிக்கோரி எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும், மாநாட்டிற்கு அனுமதி கோரியும் த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலிடம் மனு அளித்துள்ளார்.
மனுவில், வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி அன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் த.வெ.க.வினர் மற்றும் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



