ஆன்மிகம்

ஒரே இடத்தில் அம்மன்கள்....பக்தர்கள் பரவசம்! 

ஆடி திருவிழாவையொட்டி, சேலத்தில் முதல் முறையாக 51 சக்தி பீட அம்மன்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் தெய்வீக திருமண மண்டபத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் 
ராசி சரவணன், சுகந்தி சுதர்சனம் உள்ளிட்ட ஆன்மீக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஜூலை 26) முதல் ஆகஸ்ட் 04- ஆம் தேதி வரை தினமும் காலை 07.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ தில்லை காளி, சோட்டாணிக்கரை பகவதி அம்மன், ஸ்ரீ பெரிய பாளையத்தம்மாள், ஸ்ரீ மீன் குளத்தி பகவதி அம்மன் உள்ளிட்ட 51 வகையான அம்மன்களை பக்தர்கள் நேரில் கண்டுகளிக்கலாம். அனுமதி முற்றிலும் இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.