ட்ரெண்டிங்

தஞ்சாவூர்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் ரத்து!

தஞ்சாவூர்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜோலார்பேட்டை - சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே லெவல் கிராசிங்கிற்கு பதிலாக சுரங்க பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

 

இதன் காரணமாக, சேலம் கரூர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் ஹுப்ளி- தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு (ரயில் எண் 07325) நேற்று (செப்.11) ரத்துச் செய்யப்பட்டது. அதேபோல், மறுமார்க்கத்தில், சேலம், கரூர் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் தஞ்சாவூர்- ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (ரயில் எண் 07326) இன்று (செப்.12) ரத்துச் செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.