ஆன்மிகம்

ஆடித் திருவிழா- ஆக.07- ல் சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை! 

சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 07- புதன்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 07- ஆம் தேதி புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை, அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 31- ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.