ஆன்மிகம்

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, சேலம் கோயில்களில் சிறப்பு பூஜைகள்! 

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு, சேலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோட்டை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், குகை காளியம்மன், மாரியம்மன் திருக்கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோயில், சின்னக்கடை வீதியில் உள்ள மாரியம்மன் திருக்கோயில், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் பூஜைகள் நடைபெற்றது. 

பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆடி மாத திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதற்கான கொண்டாட்டங்கள் சேலத்தில் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

வரும் வாரங்களில் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.