ட்ரெண்டிங்

சேலம் அரசு மருத்துவமனையில் எலி தொல்லை அதிகரிப்பு – நடவடிக்கை கோரி மனு !

 

சேலம் அரசு மருத்துவமனையில் சமீப காலமாக எலி தொல்லை அதிகமாக இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது..

அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் மட்டுமின்றி மாவட்டத்தை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையின் டீன் தேவி மீனாளிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகள் பெரும் நெடுஞ்சல் ஆகவும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் வகையில் அதிக அளவில் எலிகள் சுற்றி வருகின்றன இந்த எலிகள் நோயாளிகளுக்கு கொடுப்பதற்காக வைக்கப்படும் உணவுப் பொருட்கள் மீதும் உடைமைகள் மீதும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன இதனால் உள் நோயாளிகள் கடும் பாதிப்படைவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

எனவே உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு நோயாளிகளை பாதுகாக்கும் வகையில் எலிகளிடம் இருந்து பரவும் தொற்று நோயை தடுத்து எலிகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் எலி பிடிக்கும் அட்டைகள் மற்றும் கூண்டுகளுடன் மருத்துவமனை முதல்வரிடம் மனு அளித்தது.பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.