ட்ரெண்டிங்

மைக்ரோசாஃப்ட் பிரச்சனை- வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்! 

மைக்ரோசாஃப்ட் பிரச்னை- வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தல்! 

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்சனையால் வங்கிகளில் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்சனையால் உலகம் முழுவதும் விமான சேவை, மென்பொருள் நிறுவனங்கள், வங்கி சேவைகள் முடங்கியுள்ளது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில், 
மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்சனையால் இந்தியாவில் உள்ள வங்கிகளில் சிறியளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

சில வங்கிகள் மட்டுமே crowd strike- ஐ பயன்படுத்தியதால் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், செயல்பாட்டை உறுதிச் செய்யவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மைக்ரோசாஃப்ட் செயலிழப்பில் ஒட்டுமொத்தமாக இந்திய நிதித்துறை பெருமளவில் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.