ட்ரெண்டிங்

சேலம் கடைவீதியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனைக்கு குவிப்பு!!!

 

சேலம்:ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகைகளை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் பண்டிகை கோலம் பூண்டுள்ளது.

சேலம் கடைவீதியில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள பூஜைப் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து நிலையில். 

பண்டிகைக்குத் தேவையான பொறி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை, மஞ்சள், குங்குமம், மலர், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகளில் குவிக்கப்பட்டுள்ளன. 

காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சொல்கின்றனர்.

குறிப்பாக பூஜையில் தவிர்க்க முடியாத பொறி மூட்டைகள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. ஒரு மூட்டை பொறி ரூ.500க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல பொட்டுக்கடலை கிலோவுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை, எள் உருண்டை ரூ.120, கடலை உருண்டை ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் கூறுகையில் :-

ஆயுத பூஜை என்பது நம் பாரம்பரியத்தோடு தொடர்புடைய பண்டிகை.குடும்பங்கள் மட்டுமின்றி தொழில்கள் நடத்தும் நிறுவனங்களும் இந்த கடைகளில் இருந்து பெருமளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

கடந்த ஆண்டை விட இம்முறை விற்பனை அதிகரித்துள்ளது,என தெரிவித்தனர்.

இதனால் சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அதிகரித்து, பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.