ஆன்மிகம்

10 ஆண்டுகளாக கோயிலில் நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் நிறைவு!


சேலம் அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

100 ஆண்டுகளுக்கு முன்பாக, மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை மாரியம்மன் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தனர். சீரமைப்புப் பணிகள் நிறைவுப் பெற்றதை அடுத்து, வரும் அக்டோபர் 27- ஆம் தேதி அன்று குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் சார்பில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதன்முறையாக நடத்தப்படும் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், "உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பான கடிதம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் படி, குடமுழுக்கு நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.