ட்ரெண்டிங்

மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட்-எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.முக.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்; மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். ஓ.பன்னீர்செல்வத்தின் மேலமுறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது வரவேற்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து முறைப்படி அறிவிக்கப்படும்.

 

21,000 அரசுப் பேருந்துகளில் 16,000 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது; 5,000 பேருந்துகள் பழுதாகி நிற்கிறது. தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களை பற்றி தி.மு.க. அரசுக்கு கவலையில்லை. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து முறைப்படி அறிவிக்கப்படும்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு இலவச பயணங்களை வழங்கும், சாதாரண வகை பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட தி.மு.க. அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.

 

500 மின்சார பேருந்துகளை வாங்கும் என 3 ஆண்டுகளாகக் கூறி வரும் தி.மு.க. அரசு, இதுவரை ஒரு பேருந்தைக் கூட வாங்கவில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்களின் கஷ்டங்களை உணர்ந்து தி.மு.க. அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். s