ட்ரெண்டிங்

"நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன்"-ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்!

"நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன்"-ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்! 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 12) காலை 11.00 மணிக்கு நீட் இளநிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுடனும், அவர்களின் பெற்றோர்களுடனும் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. 

அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர், ஆளுநரிடம் நேருக்கு நேராக, "தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எப்போது தடை விதிக்கப்படும்" என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன். நீட் தேர்வுக்கு நான் எப்போதும் தடைக் கொடுக்க மாட்டேன். கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு விலக்களிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனை கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று பயில வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தும் போதே நீட் தேர்வுக்கும் மாணவர்களை தயார் செய்யலாம்". இவ்வாறு ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.