ட்ரெண்டிங்

குழந்தைகளுக்கு உணவு ஊட்டி முதலமைச்சர் மகிழ்ச்சி! 

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

திருவள்ளூர், கீழச்சேரி புனித அன்னாள் அரசு உதவிப்பெறும் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 2.23 லட்சம் குழந்தைகள் பயனடைவர். 

காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உண்டார். அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு அவர்களுடன் பேசியபடி, தானும் உணவருந்தினார். 

கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 15- ஆம் தேதி அரசுத் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால் 18.50 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.