ட்ரெண்டிங்

என்னை மையப்படுத்தி வதந்தி- இசையமைப்பாளர் இளையராஜா ட்வீட்! 


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் அர்த்த மண்டபத்திற்குள் இசையமைப்பாளர் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இது தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் விவாதமானது; சர்ச்சை எழுந்தது. 

இந்த சூழலில், இது குறித்து இசைஞானி இளையராஜா எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.