சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, 2024- ஆம் ஆண்டிற்கான நேரடிச் சேர்க்கை (Spot Admission) ஜூலை 16- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266- 39467, 99427- 12736, 99441 - 09416, 98432- 75111 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்.
வெல்டர்(பைட்) மற்றும் வெல்டர் (GMAWS>AW) பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், பொருத்துநர். இயந்திர வேலையாள், இயந்திர வேலையாள் (அரவை), கடைசலர், ஏசி மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட தொழில்நுட்ப மையம் 4.0-இல் மேனுபேக்சரிங் ப்ராசஸ் கன்ட்ரோல் & ஆட்டோமேசன், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், அட்வான்ஸ்டு சிஎன்சி மெசினிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கு 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேரடிச்சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி, e-mail id, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் சேர்க்கைக் கட்டணமாக ஓர் ஆண்டுக்கு ரூபாய் 235 மற்றும் 2 ஆண்டுகளுக்கு ரூபாய் 245 ஆகும்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 750 பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி, காலணி போன்ற விலையில்லா பொருட்களும் பஸ் பாஸ் மற்றும் புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோரும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14 உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். விருப்பமுள்ளவர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.



