ட்ரெண்டிங்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை! 

மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 01) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய சட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க முன்னுரிமைத் தரப்பட்டுள்ளது. பூஜ்ஜிய எப்.ஐ.ஆர். முறை மூலம் காவல் நிலையத்தின் எல்லைப் பிரச்சனைகள் தீர்க்கப்படும். புதிய குற்றவியல் சட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க முன்னுரிமை தரப்பட்டுள்ளது. 

புதிய சட்டங்கள் மூலம் பெண்களைக் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முடியும். கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைமுறைகளை இணையவழியில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப புதிய குற்றவியல் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தவறான வாக்குறுதிக் கொடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தனிக்குற்றம் வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.