ஆன்மிகம்

தஞ்சாவூரில் 89வது ஆண்டாக ஒரே இடத்தில் 24 கருட சேவை விழா

 தஞ்சாவூரில் 89வது ஆண்டாக ஒரே இடத்தில் 24 கருட சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீ ராமானுஜ தரிசன சபை சார்பில் தொடர்ந்து 89 ஆம் ஆண்டாக இந்த விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில், வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயிலில் திவ்யதேச பெருமாள்களுக்குத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, 24 கருட சேவை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 24 கோயில் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி அந்தந்த கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு, கொடி மரத்து மூலைக்கு 7 மணியளவில் சென்றடைந்தனர்.