ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகை- ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அற

 

தீபாவளி பண்டிகையையொட்டி, 12 ரயில்களில் தலா 1 பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 10, 11, 13 ஆகிய தேதிகளில் கோவை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-கோவை எக்ஸ்பிரஸ், நவம்பர் 10- ஆம் தேதி கோவை- சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 11- ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 09, 11 ஆகிய தேதிகளில் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10, 12 ஆகிய தேதிகளில் நாகர்கோவில்- கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10, 13 ஆகிய தேதிகளில் ஈரோடு- சென்னை சென்ட்ரல் ஏற்காடு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 11, 14 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல்- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 13- ஆம் தேதி சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 14- ஆம் தேதி சென்னை எழும்பூர்- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், நவம்பர் 10- ஆம் தேதி சென்னை சென்ட்ரல்- போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ், நவம்பர் 12- ஆம் தேதி போடிநாயக்கனூர்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 12 ரயில்களில் தலா 1 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.