ட்ரெண்டிங்

சேலத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற ஆவின் பால்!

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று (டிச.17) மாலை 05.00 மணியளவில் சேலத்தில் இருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனம், போதுமான அளவில் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.