ட்ரெண்டிங்

சேலம்-ஆத்தூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல் !!!

 

ஆத்தூர் அருகே 20 நாட்களாகியும் முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது,

 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தம்மம்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது, இன்னிலையில் 8வது வார்டில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை முறையாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தராத செயல் அலுவலர் மற்றும் திமுக, பேரூராட்சி தலைவரை கண்டித்து காயிதேமில்லத் நகரை சேர்ந்த பெண்கள் காலிகுடங்களுடன் கெங்கவல்லி - தம்மம்பட்டி சாலையில் திடிர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து,பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பெண்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.